கரூர், அக். 29: கரூர் மாநகராட்சியில் வைட்டமின் ஏ திரவரம் வழங்கும் பணிகளை மாநகாட்சி மேயர் கவிதா கணேசன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழக முழுவதும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, கரூர் மாநகராட்சி பகுதியில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்த அங்கன்வாடி மையத்தில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆய்வு செய்தார். மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் கௌரி சரவணன், சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், கரூர் மாநகராட்சி பகுதிகளில் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க அங்கன்வாடி மையங்களுக்கு ஆர்வமுடன் நேரில் அழைத்து வந்தனர்.

