அரவக்குறிச்சி, அக்.25: அரவக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை பேருந்து நிலையம் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அரவக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது கூடுதல் விலைக்கு மது விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது,விசாரணையில் மதுவிற்றவர் திண்டுக்கல் மாவட்டம் கே.அத்தி கோம்பையைச் சேர்ந்த மகேஸ்வரன் (46). என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement
