கிருஷ்ணராயபுரம், செப். 24: கிருஷ்ணராயபுரம் தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் புதிய திட்டப் பணி மற்றும் புதிய பகுதிநேர நியாய விலை கடைகளை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் திறந்துவைத்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவாயம் ஊராட்சி தேசியமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025-26ம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் தரை தளத்தை எம்எல்ஏ மாணிக்கம் திறந்துவைத்தார்.
+
Advertisement