கரூர், அக். 23: அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரிக்கு ரூ, 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட கழக செயலாளர் வி.செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்று ரூ. 3000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, அரவக்குறிச்சிக்கு அரசு கலை கல்லூரி அமைத்து தருமாறு செயலாளர் வி.செந்தில் பாலாஜி மூலமாக கோரிக்கைவைத்தார். இதன் ஒரு பகுதியாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கலை அமைப்பதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி கொடுத்துள்ளார்.
கல்லூரி அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதன்படி அரவக்குறிச்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசு கல்லூரி அமைப்பதற்கு நிதி ஒதுக்கித்தந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட மக்கள் சார்பாகவும், அரவக்குறிச்சி தொகுதி மக்கள் சார்பில் செந்தில்பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார்.