கரூர், செப்.21: கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாநகராட்சி தான்தோன்றி மலையில் தென் திருப்பதி என்றழைக்கப்படும் அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது.பல நூற்றாண்டு பழமை வாய்ந்த குடைவரை கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி பெருந் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு கல்யாண வெங்கடரமண சாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 10 நாட்களுக்கு முன் பாலாலயம் பூஜை செய்யப்பட்டது.