கரூர், ஆக. 19: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உடல்நிலை சரியின்றி அவதிப்பட்ட விவசாயி, விஷம் குடி த்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்தள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (67). விவசாயி. இவர், கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மனநிலையில் இருநது வந்த பழனிச்சாமி, கடந்த 16ம்தேதி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் விஷம் குடி த்து மயங்கினார். ஆபத்தான நிலையில், கரூர் தனியார் மருததுவமனையில சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இற ந்தார்.புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement