தோகைமலை, நவ. 15: தோகைமலை அருகே பொது இடத்தில் அமர்ந்து மது குடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாடாகப்பட்டி பிரிவு ரோடு அருகே உள்ள பொது இடங்களில் மதுபானங்கள் அறுந்துவதாக பொதுமக்கள் புகார் அளித்து உள்ளனர். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் உள்ள நாடகாப்பட்டி பிரிவு ரோடு அருகே உள்ள பொது இடங்களில் சிலர் மதுபானங்களை குடித்துக்கொண்டு இருந்து உள்ளனர்.இதனால் அங்கு சென்ற போலீசாரை கண்டு சிலர் தப்பி ஓடி உள்ளனர். இதில் சிலரை பிடித்து விசாரனை மேற்கொண்டனர். அப்போது நாகனூர் ஊராட்சி கலிங்கப்பட்டியை சேர்ந்த ராமராஜ் (28), கிருஷ்ணன் (28), ஆகியோர் பொது இடங்களில் மதுபானங்களை அறுந்தி உள்ளனர். இதனை அடுத்து பொது இடங்களில் மதுபானங்கள் குடித்த ராமராஜ், கிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
