வேலாயுதம்பாளையம், ஆக.12: கரூர் மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் அளவிலான பூப்பந்தாட்ட விளையாட்டுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு போட்டி ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து 150 க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் சப்- ஜூனியர் பிரிவிற்கு முறையே 10 மாணவர்களும், 10 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டனர் .இவர்கள் மதுரையில் நடைபெற உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சப் -ஜூனியர் பிரிவில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஜூனியர் பிரிவில் 10 மாணவர்களும் மற்றும்10 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு தனியார் பொறியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறும் பூப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். கரூர் மாவட்டம் சார்பில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என கரூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகச் செயலாளர் சிங்காரவேல் தெரிவித்தார்.