கரூர், நவ. 11: கரூர் அரசு மருத்துவமனை அருகே கொட்டப்பட்டும் குப்பைகளால் ஏற்பட்டுள்ள என சுகாதார சீர்கேடை தடக்க அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கருர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையின் பின்புற பகுதியின் சில பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை மையமாக வைத்து இந்த பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
நாய்களை தொடர்ந்து, கால்நடைகளும் குப்பைகளை கிளறுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு குப்பைகள் கொட்டாதவாறு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
