கிருஷ்ணராயபுரம்;நவ.11: கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுப்பட்டி அரசு பள்ளி திருக்குறள் ஒப்புதல் போட்டி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புதல் நிகழ்ச்சியில் சான்றிதழ் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தனர்.கரூரில் வீ.த. லீடர்ஸ் அறக்கட்டளை மற்றும் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி இணைந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் 50 குறள்கள் ஒப்புவித்தல்,6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 100 குறள்கள் ஒப்புவித்தல் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 150 குறள்கள் ஒப்புவித்தல் போட்டியில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் 1ஆம் முதல் 5 ஆம் வகுப்பு பிரிவில் 5 பேர் கலந்து கொண்டு 50 திருக்குறள்கள் ஒப்புவித்து சான்றிதழ் பெற்றனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கன்னிகா, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சித்ரா, உமா மகேஸ்வரி மற்றும்
பெற்றோர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
