கரூர், செப். 3: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பகுதிச் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருச்சி சாலையில் இருந்து மதுரை சாலைக்கு செல்லும் சாலை சின்னாண்டாங்கோயில் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன.இந்நிலையில், இந்த சாலையோரம் இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒரிடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது அகற்றாத காரணத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே, இந்த பகுதியோரம் கொட்டப்படும் குப்பைகள் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உடனுக்குடன் குப்பைகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
+
Advertisement