கரூர், செப். 2: பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யததாக 6 பேர் மீது போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர். சிந்தாமணிப்பட்டி, தாந்தோணிமலை, பாலவிடுதி, மாயனூர், அரவக்குறிச்சி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததாக முருகானந்தம், கல்யாணசுந்தரம், சிவக்குமார், ஆறுமுகம், ராஜ்குமார், ஜெய்லானி ஆகிய 6 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து 7 கிலோ 500 குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
+
Advertisement