அருமனை, அக். 31: இடைக்கோடு பேரூராட்சியில் மேல்பாலையில் இருந்து மொட்டக்காலை செல்லும் சாலையில், அரசு உதவி பெறும் பள்ளிக்கு அருகே சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக, அந்த சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல மாதங்களாக சாலை சீரமைக்கப்படாததால், தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பழுதடைந்த சாலையை சீரமைத்து தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement 
 
  
  
  
   
