நாகர்கோவில், அக். 31: வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திறமை நிகழ்ச்சி நடைபெற்றது. மழலையர் பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் முனைவர் கிருஷ்ணசுவாமி தலைமை உரையாற்றினார். பள்ளியின் இயக்குநர் தருண்சுரத், முதல்வர் லிஜோமோள் ஜேக்கப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளியில் பயிலும் மழலையர் தங்கள் திறமைகளை பேச்சு, நடனம், கதைகூறுதல் போன்ற நிகழ்வுகள் வாயிலாக வெளிப்படுத்தினர். திறமைகளை வெளிப்படுத்திய மழலையரை பள்ளியின் துணை தாளாளர் சுனி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
+
Advertisement 
 
  
  
  
   
