நாகர்கோவில், அக்.30 : குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 1ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட உள்ளது. அரசால் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்கு தேவையான விபரங்களை அளித்திடவும் அனைத்து துறைகளின் அலுவலர்களும் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
