தக்கலை, ஆக.30 : குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்வு நடைபெற்றது. மாணவி ஆஸ்மி வரவேற்றார். மாணவி ராம் வித்யா ராஜ் அறிமுகயுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் இரா.மாரிமுத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முத்தமிழ் மன்ற தலைவராக மாணவி நந்தினி, துணைத்தலைவராக மாணவி அபிராமி, செயலாளராக மாணவி ஜெசிகா ராய், துணை செயலாளராக மாணவி கீர்த்திகா, பொருளாராக மகாலெட்சுமி நியமிக்கப்பட்டனர். உறுதிமொழி குறிப்பை தமிழ்த்துறை தலைவர் பத்ம தேவி நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை மாணவி நெளபா நிகழ்த்தினார். நிகழ்ச்சி சிறக்க கல்லூரி தலைவர் எம்.எஸ்.பைசல்கான், செயலர் ஏ.பி மஜீத்கான், பல்கலை கழக இணை துணைவேந்தர் (நிர்வாகம்) கே.ஏ ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
+
Advertisement