மார்த்தாண்டம், ஆக. 30: களியக்காவிளை ஒற்றபனைவிளையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜா. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, பின்பக்க கதவு வழியாக காரக்கோணம் புல்லன்தேரி பகுதியை சேர்ந்த சிமிகுட்டன் (39) என்பவர், வீட்டிற்குள் புகுந்து ஜாவின் கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் பெனடித் தலைமையிலான போலீசார், வழக்குபதிவு செய்து, சிமிகுட்டனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
+
Advertisement