குளச்சல்,நவ.29 : சைமன்காலனி ஊராட்சிக்குட்பட்ட சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை ஆகிய கிராமங்களில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய கேட்பது, தெரு விளக்குகள் மற்றும் சாலைகளை சீரமைப்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) சார்பில் சைமன்காலனி ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.குளச்சல் வட்டார குழு தலைவர் ஜெனிதா தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கார்மல் மற்றும் நிர்வாகிகள் மெர்சி, ரஞ்சன்,சுகுமார், வசந்தி,அருள் ரெமோ,ராணி,ஷீபா உள்பட பலர் கலந்து கொண்டனர். லெனினிஸ்ட் மாநில குழு உறுப்பினர் அந்தோணி முத்து,மாவட்ட செயலாளர் சுசீலா ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர்.
+
Advertisement

