குளச்சல், நவ.28: மணவாளக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ. சதீஷ் மற்றும் போலீசார் படர்நிலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது படர்நிலம் வயக்கரை பகுதியில் ஒருவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த மணி (56) என்ற ஒற்றைக்கண் மணி என்பது தெரியவந்தது. இதையடுத்து மணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement

