நித்திரவிளை, செப்.27 : கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன் துறை கோவில்வளாகம் பகுதியை சேர்ந்தவர் புதுசீர் (44). மீன்பிடி தொழிலாளி. இவரது மாமா கொல்லங்கோடு மதர் தெரேசா ஜங்ஷன் பகுதியை சேர்ந்த ததேயுஸ். மீன்பிடி தொழிலாளி. கடந்த 21ம் தேதி மார்த்தாண்டன் துறையில் கால்பந்து போட்டி நடந்த போது, அங்கு வைத்து புதுசீருக்கும், ததேயுஸூக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே வள்ளவிளை சுனாமி காலனி பகுதியை சேர்ந்த அலெக்சாண்டருடன் சேர்ந்து, ததேயுஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், புதுசீரின் தோள்பட்டை மற்றும் விலா பகுதியில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த புதுசீர் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் ததேயுஸ் மற்றும் அலெக்சாண்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement