நாகர்கோவில், ஆக. 27: நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சுப்பிரமணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி நிறுவனம், நாகர்கோவில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற குறைதீர்ப்பு முகாம் நாளை(28ம் தேதி) குலசேகரம் கூடைத்தூக்கியில் உள்ள எஸ்ஆர்கே இன்டர்நேஷனல் பள்ளியில் நடக்கிறது.முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. முகாமில் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், முதலாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
+
Advertisement