Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய பாரத எழுத்தறிவு திட்ட 2ம் கட்டத் தேர்வுகள் டிச.14ல் நடக்கிறது

நாகர்கோவில், நவ.26 : புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 2ம் கட்ட தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது.தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதோருக்கான புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 2025-26ம் ஆண்டு செயல்பாடுகளின் இரண்டாம் கட்டமாக, கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத் தேர்வு 2025 டிசம்பர் 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட உள்ளது. 2025-26ம் ஆண்டில் கண்டறியப்பட்ட 9 லட்சத்து 63 ஆயிரத்து 171 பேர் இத்தேர்வில் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள 37 ஆயிரத்து 75 கற்போர் எழுத்தறிவு மையங்களில் இத்தேர்வு நடைபெறும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் ஜூன் 15, 2025 அன்று 5 லட்சத்து 37 ஆயிரத்து 876 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கு தன்னார்வலர்களின் உதவியுடன் 200 மணி நேரக் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் ஜூலை முதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.