நாகர்கோவில், அக்.26: அரசு தேர்வுகள் இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 11ம் தேதி அன்று நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறியீடு சார்பாக மாற்றம் தெரிவிக்க விரும்பினால் அவற்றை அக்டோபர் 31ம் தேதிக்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என் விபரத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement

