அஞ்சுகிராமம், அக்.26: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழா கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன் தலைமையில் நடந்தது. கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பொறுப்பு டிஎஸ்பி சிவசங்கரன் மற்றும் ஒலிம்பியன் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். முடிவில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சபரீஷ் காட்வின் நன்றி கூறினார்.
+
Advertisement

