திங்கள்சந்தை, செப். 26: இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆன்றோ கெவின் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை திங்கள்நகர் பெரியாபள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த கனரக டெம்போவை நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார். அதைத்தொடர்ந்து டெம்போவை பரிசோதனை செய்த போது எவ்வித அரசு அனுமதியும் இன்றி ஒரு யூனிட் எம்சாண்ட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. டெம்போவை கைப்பற்றி இரணியல் போலீஸ் நிலையம் கொண்டு வந்து டெம்போ டிரைவர் மேற்கு நெய்யூரை சேர்ந்த காட்வின் சந்துரு (28), உரிமையாளர் ஜெயராம் (35) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement