புதுக்கடை , செப்.26: பைங்குளம் அரசு முழு நேர நூலக வாசகர் வட்ட கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. நூலகர் துளசி முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட உறுப்பினர்கள் ராமலட்சுமி, கிருஷ்ணன், சின்னையன், ராஜேஸ்வரி ,கோவிந்தராஜ், வில்சன், ராஜேஷ் ,பேராசிரியர் சஜீவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நூலக வார விழாவை சிறப்பாக நடத்துவது , சிறப்பு விருந்தினராக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரை அழைப்பது , மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது, நூலக கண்காட்சி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
+
Advertisement