கருங்கல், அக்.25 : கருங்கலில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில் பாலூர் பகுதியில் நின்ற பெரிய புளிய மரம் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக சாலையின் குறுக்கே வேருடன் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரத்தின் பெரிய கிளைகள் உயர் அழுத்த மின்பாதையில் உள்ள மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் தடை பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
+
Advertisement

