மார்த்தாண்டம், செப். 25: மார்த்தாண்டம் அருகே மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (61). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. இவரது மனைவி செல்வி (61). சம்பவத்தன்று ஜெயகுமார் பைக்கில் மேல்புறத்தில் இருந்து, குழித்துறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வட்டவிளை பகுதியில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த பைக் ஜெயகுமார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயகுமாரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பைக்கில் வந்த குலசேகரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ஹரிஹரன் (21) காயம் அடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செல்வி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement