கருங்கல், செப். 25:‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முதலமைச்சரின் திட்டம் மூலம், புத்தன்துறையை சேர்ந்த மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள், சர்ஜின் தலைமையில் நியூட்டன் ஜூடி காட்வின், நீலன் உட்பட 50க்கும் மேற்பட்டோர், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோபால் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்சிறை ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன், அம்சி நடராஜன், கொல்லங்கோடு மீனவரணி அமைப்பாளர் டைட்டஸ் பாபு, நகர இளைஞரணி அமைப்பாளர் மெஜில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement