குளச்சல், செப்.25:குளச்சல் அருகே மேற்கு நெய்யூரை அடுத்த சரல் பகுதியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதாக சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பொக்லைன் மூலம் செம்மண் வெட்டி டெம்போவில் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்தனர். போலீசாரை கண்டதும் பொக்லைன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். எனினும் போலீசார் சுதாரித்து கொண்டு டெம்போ டிரைவரான ரெஜின் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் அங்கு நின்ற டெம்போ மற்றும் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான பொக்லைன் டிரைவரை தேடி வருகின்றனர்.
+
Advertisement