நாகர்கோவில், அக்.23: நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (47). லோடுமேன். கடந்த 20ம்தேதி (தீபாவளி அன்று), இவர் தனது ஸ்கூட்டரில் நண்பர் ஒருவரை பின்னால் அமர வைத்து, பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மேம்பாலத்தின் கீழ் உள்ள தூண் வழியாக வலது பக்கம் திரும்ப முயலும் போது பின்னால் வந்த தனியார் ஆம்புலன்ஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, எஸ்.எஸ்.ஐ. விவின்குமார் விசாரணை நடத்தி ஆம்புலன்ஸ் டிரைவர் ஈசாந்திமங்கலத்தை சேர்ந்த அர்ஜூனன் (34) மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
+
Advertisement

