நித்திரவிளை, அக். 23: நித்திரவிளை எஸ்ஐ ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார், இரவிபுத்தன்துறை இடப்பாடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சிறுவன் ஓட்டி வந்த பைக்கை மடக்கி பிடித்து, போலீசார் சோதனை செய்தனர். அப்போது பைக்கை ஓட்டி வந்த சிறுவனுக்கு 16 வயதே ஆனதால், பைக்கின் உரிமையாளர் இனையம் ஆழித்துறை பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி அந்தோணி அடிமை என்பவர் மீது, நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement

