மார்த்தாண்டம், ஆக. 22: மார்த்தாண்டம் பஸ் நிலையத்தை அழகுபடுத்தும் விதமாக வரையப்பட்ட வண்ண படங்களை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி, ஆணையாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மார்த்தாண்டம் பஸ் நிலைய சுவர்கள் மற்றும் பில்லர்களில் போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்பட்டு வந்தது.இது நாட்கள் செல்ல செல்ல சுவரே தெரியாமல் நோட்டீஸ் மயமாக மாறியது. இதனால் சுவர்களும் சேதம் அடைந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் ரூ. 66 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது.இதையடுத்து பஸ் நிலையத்தில் போஸ்டர்கள் அனைத்தும் கிழித்து அகற்றப்பட்டு சுவர்களை அழகு படுத்தும் பணி துவங்கியது. பில்லர் மற்றும் சுவர்களில் வண்ண படங்கள் வரையப்பட்டு, அரசின் திட்டங்களும் வரையப்பட்டு வந்தது. இதனால் பஸ் நிலைய சுவர்கள் அழகாக மாறியது. இதற்கான பணி சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்தது. இதை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி, ஆணையாளர் ராஜேஸ்வரன், கவுன்சிலர்கள் அருள், விஜூ, ஆர்ஐ செந்தில் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் செல்வ பிரசாந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
+
Advertisement