பூதப்பாண்டி, ஆக. 22: பூதப்பாண்டியில் நேற்று பொதுவுடமை போராளி பா.ஜீவானந்தத்தின் 119வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வ.உ.சி பேரவை தலைவர் செந்தில்குமார், விஷ்வ இந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் காளியப்பன் ஆகியோர் தலைமையில் அங்குள்ள ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தோவாளை மேற்கு ஒன்றிய பாஜ தலைவர் வழக்கறிஞர் கோலப்பன், வ.உ.சி பேரவை செயலாளர் நாதன், வார்டு உறுப்பினர் உஷா ஜீவானந்தம் மற்றும் அவரது உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை தலைமையிலும், ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின் பெனட், சக்திவேல், வார்டு கவுன்சிலர் ஜெசி தம்பி, பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தஸ்தகீர் மற்றும் ஆர்டிக் எபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement