மார்த்தாண்டம், ஆக. 22: திங்கள்சந்தை அருகே நெய்யூர் மேலமாங்குழி பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மகன் விவேக் (39). இவர் கோதநல்லூர் பேரூராட்சியில் முதல்நிலை இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று விவேக் பைக்கில் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரங்கோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரே வேகமாக வந்த கார் ஒன்று, விவேக் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் அடைந்த விவேக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement