நாகர்கோவில், நவ.19: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்கு பெண் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழத்தில் இளங்கலை யோகா மற்றும் இயற்கை அறிவியல் அல்லது டிப்ளமோ யோகா மற்றும் இயற்கை அறிவியல் படித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. யோகா பயிற்சியாளருக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை நாகர்கோவில், அண்ணா விளையாட்டரங்கத்தில் 19.11.2025 மாலை 5க்குள் சமர்ப்பிக்கலாம். காலம் தாழ்த்தி வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


