நாகர்கோவில், நவ.18: வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அருணாச்சலா பள்ளியின் துணை தாளாளர் சுனி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். பள்ளி முதல்வர் லிஜோமோள் ஜேக்கப் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் ரோஷன் ஆ சேம் குழந்தைகள் தின உரையாற்றினார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் அருணாச்சலா பள்ளி ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை லாவண்யா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
+
Advertisement


