நாகர்கோவில், அக்.17: குமரி மாவட்டத்தில் இன்று (17ம் தேதி) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 43க்கு மறவன்குடியிருப்பு மாதா மஹால், திருவிதாங்கோடு பேரூராட்சி வார்டு 10 முதல் 18க்கு திருவிதாங்கோடு அழகியமண்டபம் லைட் ஹவுஸ் ஆடிட்டோரியம், புத்தளம் பேரூராட்சிக்கு 9 முதல் 15 வார்டுகளுக்கு சொத்தவிளை சமுதாய நலக்கூடம், முட்டம் ஊராட்சிக்கு முட்டம் ஜேபிஆர் திருமண மண்டபம், பஞ்சலிங்கபுரம் ஊராட்சிக்கு சுண்டன்பரப்பு சமுதாய நலக்கூடம், தர்மபுரம் ஊராட்சிக்கு நரையன்விளை கங்கா மஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது.
+
Advertisement