திருவனந்தபுரம், அக். 16: திருவனந்தபுரத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ஆதில் (27). தஃப்முட்டு ஆசிரியராக உள்ளார். தஃப்முட்டு கலை, பெரும்பாலும் பள்ளி கலைநிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது. முகம்மது ஆதில் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு இதை பயிற்றுவித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடையில் உள்ள ஒரு பள்ளிக்கு மாணவ, மாணவிகளுக்கு தஃப்முட்டு பயிற்றுவிப்பதற்காக சென்றார். அப்போது ஒரு பிளஸ் டூ மாணவியை இவர் காரில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காட்டாக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து முகம்மது ஆதிலை கைது செய்தனர்.
+
Advertisement