நாகர்கோவில், செப்.16 : குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர் சங்கத்தினர் அதன் மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில் நேற்று எஸ்.பி., ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது, வருகிற 27 ம் தேதி காலை 10 மணிக்கு, நாகர்கோவில் ஒழுகினசேரியில் வைத்து நடைபெற உள்ள சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள எஸ்பிக்கு அழைப்பு விடுத்தனர். எஸ்.பி.யும், இதில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார். ஏடிஎஸ்பி மதியழகன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து ெகாள்கிறார்கள். மனம் திறந்து நிகழ்ச்சி உள்பட காவல்துறையினர் நலன் ெதாடர்பாக எஸ்.பி. ஸ்டாலின் கொண்டு வந்துள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.