நாகர்கோவில், செப். 16: குமரி மாவட்ட நூலக அலுவலர் மேரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வருகிற 28ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் வகையில், விண்ணப்பதாரர்களுக்கு இலவச குரூப் 2 மாதிரி தேர்வுகளை குமரி மாவட்ட மைய நூலகம் மற்றும் டாக்டர் கே.பத்மநாபன் பயோனியர் அகாடமி இணைந்து நடத்த உள்ளன. இந்த தேர்வுகள் நாகர்கோவில் மணிமேடை அருகில் உள்ள பயோனியர் அகாடமி மையத்தில் நடைபெறும். வரும் 20, 21ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தேர்வுகள் நடக்கும். இந்த தேர்வுகளை எழுத விரும்புகிறவர்கள், பயோனியர் அகாடமி மற்றும் நூலக அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.
+
Advertisement