கன்னியாகுமரி, செப். 16: கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் மந்தாரம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் மகன் ஐசக் சுபின் (28). இவர் நேற்று முன்தினம் மாலை மந்தாரம்புதூர் பஸ் நிறுத்தம் அருகே, தகாத வார்த்தைகள் பேசி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார். இது குறித்து அப்பகுதியினர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக, ஐசக் சுபின் மீது சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
+
Advertisement