மார்த்தாண்டம், செப்.15: அருமனையை அடுத்த இடைக்கோடு மலமாரி தெங்கின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்லின் ஜாய் (43). போதகர். இவரது மனைவி புனிஜோ (35). சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் மார்த்தாண்டத்தில் இருந்து உண்ணாமலைக்கடை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வேகமாக வந்த பைக் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட புனிஜோ படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பினார். இது குறித்து ஜெஸ்லின் ஜாய் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.