தக்கலை, செப்.15: திருவிதாங்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட திருவிதாங்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் ஆண் மற்றும் பெண்களுக்கான புதிய கழிவறை கட்ட 15வது நிதிக் குழு மானியம் ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பணியினை பேரூராட்சி தலைவர் நசீர் தொடங்கி வைத்தார்.
இதில் துணைத்தலைவர் சுல்பத் அமீர், வார்டு உறுப்பினர்கள் சகானா சுல்பி, தீப்தி செய்யத், விக்னேஷ், தலைமையாசிரியர் பால்ராஜ், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் பேபி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் தளபதி ஷபீக், அப்சல், சமீம், கபூர், நசுறுதீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.