கன்னியாகுமரி, அக். 14: கன்னியாகுமரி போலீஸ் எஸ்.ஐ. வினிஸ்பாபு மற்றும் போலீசார் சர்ச் ரோடு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக் ஓட்டி வந்த சிறுவனை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அதில் சிறுவன் 18 வயது நிரம்பாமல் பைக் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து 17 வயதுடைய சிறுவன் மற்றும் அவரது தாய் மேரி சகாய ஷிபானா (38) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் அதே வழியாக 18 வயது நிரம்பாமல் பைக் ஓட்டி வந்த 16 வயது சிறுவன் மற்றும் அவருக்கு பைக் ஓட்ட கொடுத்த ஜெஸ்டின்ராஜ் (55) ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
+
Advertisement