நாகர்கோவில், அக். 14: தமிழ்நாடு முழுவதும் தீயணைப்பு துறையில் சிறப்பு நிலைய அலுவலர்களாக இருந்தவர்களை நிலைய அலுவலர்களாக பதவி உயர்வு கொடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைய அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் காலி இடங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலர்களாக இருந்த பாலகிருஷ்ணன் மற்றும் சுயம்பு சுப்பாராமன் ஆகியோர் நிலைய அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இவர்களில் சுயம்பு சுப்பாராமன், குமரி மாவட்டத்தில் புதிதாக திறந்துள்ள ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு நிலைய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பாலகிருஷ்ணன், ராதாபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு நிலைய அலுவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர்கள் துணை இயக்குனர் (திருநெல்வேலி மண்டலம்) சரவணபாபு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார், உதவி கோட்ட அலுவலர்கள் துரை, இமானுவேல் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.