நாகர்கோவில், அக். 14: கன்னியாகுமரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர் சங்க நிர்வாகிகள், குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது, பணிக்கொடை வழங்கும் சட்டம் 1972ன் படி பணிக்கொடை வழங்காமல் மறுக்கப்படுகிறது. பணிக்கொடை நிதியில் எந்தவிதமான பிடித்தமோ, ஈடுசெய்யவோ வழங்க மறுப்பது செய்யக்கூடாது என சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சட்டத்தை மீறி வழங்க மறுக்கும் கூட்டுறவு அதிகாரிகளுக்கு பணி ஓய்வின் போது, பணிக்கொடை வழங்க அறிவுரை வழங்க வேண்டும். 15 தொடக்க கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படவில்லை. வழக்கு தொடர்ந்து எங்களுக்கு நிதி பயன்பெறுவதால் பல ஆண்டுகள் வீணாகி செயலிழந்து விடுகிறோம். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சுய மனநிலை இழப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட கலெக்டர் கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை பெறுவதற்கான மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
+
Advertisement