புதுக்கடை, நவ. 13: புதுக்கடை அருகே தும்பாலி பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர். இவரது நிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி பாறைகள் உடைப்பதாக, குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பூபதி கண்ணன் என்பவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கிராம அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்தவர்கள், கிராம நிர்வாக அலுவலரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். ஆனால் பாறை உடைக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். இது குறித்து புதுக்கடை போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். போலீசார் நில உரிமையாளர் ஜாண் கிறிஸ்டோபர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement
