நாகர்கோவில், நவ. 13: நாகர் கோவிலில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் நடந்த ஊழல் விழிப்புணர்வு வார விழாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
நாகர்கோவிலில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், விழிப்புணர்வு அனைவரின் கூட்டு பொறுப்பு என்ற தலைப்பில், ஊழல் விழிப்புணர்வு வார விழாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா, நாகர்கோவில் பி.எப். ஆணையர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. விழாவின் போது அவர், ‘விழிப்புணர்வு அனைவரின் கூட்டு பொறுப்பு’ என்ற தலைப்பின் முக்கியத்துவத்தை இன்றைய சமூக சூழலில் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் உதவி பி.எப் ஆணையர் அனில்குமார், கல்வி அலுவலர் இந்திராதேவி, பள்ளி முதல்வர் பத்மா மற்றும் பிற அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
