மார்த்தாண்டம், அக். 13: களியக்காவிளை அருகே குளப்புரம் அடுத்த வடலிக்காவிளையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (60). விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கொத்தனாரான பேலார் போஸ் (44) என்பவருக்கும் இடையே, காம்பவுண்ட் சுவரை இடித்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று பேலார் போஸ், கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் ஆத்திரத்தில் கேட்டை அடித்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளார். இது குறித்து கோபாலகிருஷ்ணன் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பேலார் போஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.